BFF பயிச்சி ஏன் ?

இஸ்ரவேலர்கள் ஒரு நாடு இல்லாமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தபோது, மோசேயால் அவர்கள் வழிநடத்தப்பட்டு ஒரு தேசமாக உருமாற்றமடைந்தார்கள். அவர்களுடைய சமுதாயம் ஆசரிப்பு கூடாரத்தை மையமாக கொண்டிருந்து, அதையே சார்ந்திருந்தது.

இஸ்ரவேல் மக்களின் சமுதாயம், தேவனுக்கேற்ற ஒரு நாகரிகமாக படிப்படியாக மாறியதற்குக் காரணம் அவர்களுக்கு தீர்க்கதரிசிகளால் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய படிப்பினை. அப்படிப்பினை, மோசே தேவனிடமிருந்து பெற்ற கற்பனைகளேயே உள்ளடக்கியது. அக்கற்பனை உடன்படிக்கைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப்பெட்டி ஆசரிப்பு கூடாரத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. (எபிரேயர் 9:4).

இன்று நம் நாட்டு மக்கள் தேவனுக்கேற்ற நாகரிகமாக வளர்ச்சியடைய ஆவிக்குரிய படிப்பினை தேவை. ஒரு சமுதாயம் எந்த ஒரு நல் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அச் சமூகத்திற்கு அளிக்கப்படுகிற படிப்பினையை சார்ந்தது. 

ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள் நடத்தி செல்லவேண்டிய படிப்பினையை அல்லது சித்தாந்தத்தை தேர்வு செய்து அதனை மக்கள்மேல் புகுத்துகிறது. அடாஃப் ஹிட்லர் தன்னுடைய தீமையான சித்தாந்தத்தை “ என் போரட்டம்” என்ற புத்தகம் மூலமாக வெளிப்படுத்தினார், அவர் அதை தன்மக்களுக்கு படிப்பினையாக  புகுத்தினார், இச்செயலால் அந்நாட்டினர் குறுகியகாலம் வளர்ச்சியடைவது போல் தோன்றினாலும், இறுதியாக அழிவையே அடைந்தனர்.

கம்யூனிஸ்ட், தீவிர தேசியவாதம், இஸ்லாமிய நாடுகள், சர்வாதிகாரம் இவ்வாறானவைகள் தங்கள் சித்தாந்தத்திற்கேற்ற கொள்கைகளைப் பின்பற்றி அதை மக்கள் மத்தியில் படிப்பினையாக எடுத்து செல்கின்றனர், அந்நாட்டின் தலைவர்கள் தங்கள் கொள்கைகளை மக்கள் பின்பற்றும்படி இரும்புக்கரம் கொண்டு ஆளகிறார்கள்.  உலகத்தாருடைய தீமையான படிப்பினைகள் சாமானிய மக்களுக்குள் புகுத்தப்படுகின்றன. இவ்வாறான நாடுகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. 

இந்த உலக ராஜியத்தின் மக்கள் தீமையான தங்கள் கொள்கைகளைப் பரப்புவதற்கு படிப்பினைகள் வைத்துள்ளனர், அதற்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் பரலோக ராஜியத்தின் புத்திரரான இந்திய சபையோ நோக்கமின்றி, திசையின்றி, ஆக்கபூர்வ வளர்ச்சியின்றி, கொள்கையின்றி அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றனர். 

இதற்குக் காரணம் ராஜியத்தின் புத்திரர் திடமான படிப்பினையை பின்பற்றாததுதான், இந்தியா முன்னேற்றதிற்கான மற்றும் வளர்ச்சிக்குவேண்டிய படிப்பினை BFF பயிற்சி பள்ளியில் உள்ளது. இப்பயிற்சிப் பள்ளி, கொண்டு செல்லப்படுகிற இடமெங்கும் ஆக்கப்பூர்வ வளர்ச்சி உண்டாகும். 

இப்பயிற்சிப் பள்ளியை உலகமெங்கும் எடுத்துச்செல்லும் பொறுப்பு பரலோக ராஜியத்தின் புத்திரரான இந்திய சபையை சார்ந்தது. 

தேசத்து மக்கள் தேவனை அறியும் அறிலில்லாமையால் சங்காரமாகிறார்கள், கர்த்தருடைய வசனத்தைத் தேடி அலைந்து திரிந்து அதைக் கண்டடையாமல் சோர்ந்து மடிகிறார்கள். தேசத்தின் அறியாமையை அகற்ற, பஞ்சத்தைப் போக்க, மடிகிறவர்களின் இரத்தப்பழி நம்மேல் சுமராதிருக்க, அனைத்து மக்களையும் BFF பயிற்சி பள்ளியில் கலந்து கொள்ள செய்வோமாக.     தேசிய BFF ஒருங்கிணைப்பாளர் – Dr Benedict Aruldas.  Sunday, 18 September 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *